Tuesday, August 27, 2013

என்னுள் என்ன மாற்றமோ

   


நமது ஈழத்து சகோதரர்களின் படைப்பு  ஒரு முழு நீள திரைப்படம் 

  ஏழைக்குடும்பத்தில் பிறந்த தாய் தந்தை அற்ற இன்னொருவரின் அரவணைப்பில்  வளருகிறார் கதாநாயகன். வளர்ப்பவரும் பெரிய பணக்கரனுமில்லை ஒரு வாகன திருத்துனர் சொந்தமாக கடை வைத்திருக்கிறார்.

கதாநாயகி ஒரு  உயர் யாதி தொழிலதிபரின் ஒரே ஒரு மகள் . கதாநாயகன் படிக்கும் கல்லூரியில் அவருடைய வகுப்பில்  தான் கதாநாயகி புதிதாக சேருகிறார் அவர்கள் ஒருவருடன் ஒருவர் சந்திகிறார்கள் இருவர்களுக்குள்ளும் காதல் மலர்கிறது காதலை சொல்கிறார்கள். வழமை போல கல்லூரியில் கதாநாயகனுக்கு எதிரியாக ஒரு வில்லன் இடைக்கிடை வந்து தலயை காட்டிட்டு செல்கிறார் இவர்களின் காதலை கதநாயகியின்அப்பாவிடம் தெரிய படுத்துவதும் அந்தகல்லூரி வில்லன்தான் அதன்பின்னர் கதாநாயகியின்அத்தைபையன் ஒருவர் இருக்கிறார் அவரும்ஒரு வில்லனாக வலம் வருகிறார்  இவ்வளவு பிரச்சனைகளுக்குள் இவர்களின் காதலை ஜெயிப்பதற்கு காதலர்கள் இருவரும் போராடுகிறார்கள் என்பது தான் .ஒருதென்னிந்திய சினிமா பாணியில்  திரைக்கதை சென்று கொண்டிருக்கிறது .

பாடல் வரிகள் ரொம்ப நல்லா இருக்கிறது அத்துடன் அந்த பாடலை பாடியவர்களின் குரல்களும் ரொம்பவும் ரொம்பவும் நல்லா இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரர்களே மிகவும் நீண்ட நாட்க்களுக்கு பிறகு இப்படி படைப்பு ஈழத்தில் இருந்து வந்திருப்பது பார்க்க ரொம்பவும் சந்தோசமாக இருக்கிறது





ஆனால் நண்பர்களே இந்த படத்தை பார்த்தவுடன் எனக்குள் ஒரு கவலை என்னை அறியாமலே ஏற்பட்டு விட்டது .
காரணம் .
இவ்வளவு காலமும் எதற்காக போராடினமோ அதை இந்த படத்தில் தொலைத்து விட்டார்கள் .அது தான் எமது மொழி சகோதர்களே ஏன் இப்படி செய்தீர்கள் .  எங்களின் மொழியை தொலைத்து தான் எங்களின் பதிவுகள் படைப்புக்கள் வர வேண்டும் என்றால் அப்படியான படைப்புக்களை படைக்காமல் ஒதுக்கி விடுவது எல்லோருக்கும் நல்லது

அடுத்து அதில் வரும் கதா பாத்திரங்கள் எல்லாமே தென் இந்திய திரைப்படத்தில் வருவதை போலவே அமைத்துள்ளீர்கள் ஏன் அப்படி செய்தீர்கள்.
(ஆனால் ஒன்று மட்டும் விளங்குது நீங்கள் எல்லோரும் விஜய் ரசிகர்களாக இருக்கின்றீர்கள் போலும் )

சரி முடிந்ததது முடிந்து விட்டது இனிவரும் படைப்புக்களில் சரி கவனித்து முதல் விட்ட பிழைகளை விடாமல் எல்லோரையும் சந்தோசப்படுத்தும் முகமாக  உங்களின் படைப்புக்கள் வெளி வரும் என்று நாங்கள் நம்புகிறோம்

Saturday, August 24, 2013

காதல்


இன்னும் எத்தனை முறை பிறக்க வேண்டும் தெரியவில்லை காதல் வந்த பின் தினம் தினம் ஜனனம்தான்.

Friday, August 23, 2013

உடன் பிறப்புக்கள்

என்னவோ தெரியலை இந்த திமுக செம்புகள் பூரா ஈழத்தில இருந்த மாதிரி என்னவெல்லாம் கற்பனை பண்ணி எழுதி கொண்டிருக்குதுகள் அதில இன்னொரு விடயம் அவர்களுக்கு கண்னுக்க குத்துவது என்னவென்றால் ஈழத்தமிழன் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று .
நான் உங்களிடம் கேக்கிறேன் வெளிநாட்டு வாழ்க்கை சொகுசு வாழ்க்கை என்றால் நீங்களும் எங்களை மாதிரி புறப்பட்டு வந்து வாழ வேண்டியது தானே அதை விட்டு ஏன் எங்கள் வாழ்க்கையை பார்த்து பொறாமை படுகுரியல் .

அதை விட இப்பொழுது ஈழத்தமிழர்களை தமிழ்நாட்டு தமிழர்களிடம் இருந்து ஒதுக்குவதற்கு புது முறையாக தலித் மக்களை தூண்டி விடுமாறு பதிவுகள் போட்டு அவர்களே முட்டாலாகிகொண்டிருக்கிரார்கள்  ஒன்றை மட்டும் நினைத்துகொல்லுங்க தி மு க உடன் பிறப்புகளே எல்லா மக்களையும் உங்கள் தலைவன் போல் சுயநலவாதியா இருக்க மாட்டார்கள் .

நாங்க தனிநாடு கேட்டு தி மு க உடன் பிறப்புகளே நாங்கள் உங்க வீட்டு வாசல் படிக்க வந்தோம் கேவலம் கெட்ட துரோகியான சுயநலமுடைய உங்க தலைவன் அதுக்கு ஏற்ற மாதிரி சொம்பு தூக்கிற தொண்டனுகள் இருக்கும் வரைக்கும் ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் விடுதலை என்பது வெறும் கானல் நீரே .

Wednesday, August 21, 2013

மகிழ்ச்சி

சில நிகழ்வுகள் 
சிறிதே கணங்கள் நீடித்தாலும், 
அவை தரும் மகிழ்ச்சி 
நீண்ட காலம் நிலைத்திருக்கும்.

Monday, August 19, 2013

உண்மையான காதல்

எனக்கு நீ இல்லை என்று தெரிந்தும்
உன்னை யாரிடமும் விட்டு கொடுக்க
மனமில்லை ..உன்னை வெறுப்பது போல் நடிக்க
கூட இயலவில்லை பிரிவிலும் நீ
கொண்ட நேசத்தால் ..

பெண்






எல்லா ஆணுக்குள்ளும் ஒரு பெண் ஒளிந்திருப்பதில்லை... ஆனால் , ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் ஒளிந்திருக்கிறான்..!! தேவையை பொறுத்து வெளியே தெரிகிறான் .

ஷேக்ஸ்பியர்

காதலில் வென்றவன் வாழ்க்கையில் தோற்கிறான்... காதலில் தோற்றவன் உலகையே வெல்கிறான்... ...